கூகுள் (Google)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் (Google) என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு
செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித்தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம்
ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை.
1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் துவக்கப்பட்ட
இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004ல் நடைபெற்றது.
முழுமையாகப் பயன்படும் வகையில்
உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை
இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது.
இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும்.
உலகம் முழுதும் ஒரு
மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு
நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்தி நான்கு
பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.[3][4][5][6]
கூகுளின் அதி விரைவான
வளர்ச்சியினூடே பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின்
முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு
சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.[7]
இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை
அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் சர்வதேச முகப்புப் பக்கமான கூகுள்
டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி
உள்ளது.[8]
கூகுள் குரோம் என்னும் உலவியை கூகுள்
வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு என்னும் கைப்பேசி இயக்கு
மென்பொருள் அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு
மென்பொருளை கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து
வெளியிடுகின்றது
கூகுள்









